Homeசெய்திகள்சினிமாநடிகர் விக்ரம் தான் என்னுடைய இன்ஸ்பிரேஷன்..... காந்தாரா பட இயக்குனர் நெகிழ்ச்சி!

நடிகர் விக்ரம் தான் என்னுடைய இன்ஸ்பிரேஷன்….. காந்தாரா பட இயக்குனர் நெகிழ்ச்சி!

-

நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக வலம் வருபவர். சிறுவயதிலிருந்தே சினிமா மீது ஆர்வம் கொண்ட இவர் பல தடைகளை தாண்டி தற்போது ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோவாக நிலைத்து நிற்கிறார். நடிகர் விக்ரம் தான் என்னுடைய இன்ஸ்பிரேஷன்..... காந்தாரா பட இயக்குனர் நெகிழ்ச்சி!நடிக்க வேண்டும் என்ற இவருடைய அளவில்லா ஆசையானது ஒவ்வொரு படத்திற்காகவும் இவரை கடினமாக உழைக்க வைத்தது. அதாவது இவர் தனது ஒவ்வொரு படங்களுக்காகவும் தன்னை மெழுகாய் உருக்கி நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி விடுவார். இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் தங்கலான் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 15 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை பா. ரஞ்சித் இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் இந்த படத்தைக் காண ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். எனவே படத்தின் ப்ரோமோஷன், ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி போன்றவை அடுத்தடுத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காந்தாரா என்ற படத்தை இயக்கி, நடித்து பிரம்மாண்ட வெற்றி கண்ட ரிஷப் ஷெட்டி, நடிகர் விக்ரம் குறித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “என்னுடைய பயணத்தில் நான் ஒரு நடிகனாக மாறுவதற்கு விக்ரம் சார் தான் எப்போதும் என் இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார். 24 வருட காத்திருப்புக்கு பின்னர் இன்று என் சிலையை சந்தித்தது என்னை பூமியின் அதிர்ஷ்டசாலியாக உணர வைத்துள்ளது. என்னை போன்ற நடிகர்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி. மேலும் தங்கலான் பட வெற்றி பெற வாழ்த்துக்கள். லவ் யூ சியான்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் நடிகர் விக்ரமை சந்தித்தபோது அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார் ரிஷப் ஷெட்டி.

MUST READ