நடிகர் பிரபாஸ் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவி வழங்கியுள்ளார்.
சமீபகாலமாக இந்தியாவையே உலுக்கி எடுத்துள்ள நிகழ்வு தான் வயநாடு நிலச்சரிவு. கேரளாவில் உள்ள வயநாடு பகுதியில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவினால் ஏராளமான மக்கள் வீடுகளை இழந்து உறவினர்களை இழந்து தவித்து வருகின்றனர். இதுவரை கிட்டத்தட்ட 400 க்கும் அதிகமானோர் நிலச்சரிவினால் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் பாதுகாப்பு மீட்பு படையினர் மூலம் மீட்டெடுக்கப்பட்டு முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திரை பிரபலங்கள் பலர் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். அதன்படி ஏற்கனவே நடிகர் விக்ரம், சூர்யா, கார்த்தி, ஜோதிகா, ராஷ்மிகா மந்தனா, நயன்தாரா, விக்னேஷ் சிவன் போன்றோர் லட்சத்திலும் கோடியிலும் கேரள முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு கொடுத்து வருகின்றனர். இவர்களைத் தொடர்ந்து நடிகர் பிரபாஸ் 2 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார்.
நடிகர் பிரபாஸ் கடைசியாக கல்கி 2898AD திரைப்படத்தில் நடித்திருந்தார். அதேசமயம் தி ராஜா சாப் எனும் திரைப்படத்தையும் ஸ்பிரிட் என்ற திரைப்படத்தையும் கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.