Homeசெய்திகள்சினிமாமீண்டும் ஹாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் தனுஷ்..... எந்த படத்தில் தெரியுமா?

மீண்டும் ஹாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் தனுஷ்….. எந்த படத்தில் தெரியுமா?

-

நடிகர் தனுஷ் சினிமா பின்புலத்தில் இருந்து வந்திருந்தாலும் தனது கடின உழைப்பினால் மட்டுமே தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிப்பதாக உருவெடுத்துள்ளார்.மீண்டும் ஹாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் தனுஷ்..... எந்த படத்தில் தெரியுமா? ஆரம்பத்தில் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடித்த தனுஷ் தற்போது அவரையே இயக்கும் அளவிற்கு தனது திறமையினால் உயர்ந்த நிலையை அடைந்துள்ளார். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் வரை சென்று எல்லை தாண்டி சாதனை படைத்து வருகிறார். சமீபத்தில் இவர்தான் நடிப்பில் வெளியான ராயன் திரைப்படம் மெகா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. அதைத்தொடர்ந்து இவர் குபேரா, தேரே இஷ்க் மெய்ன் என அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில் இவர் மீண்டும் ஹாலிவுட் என்ட்ரி கொடுக்க இருப்பதாக புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. மீண்டும் ஹாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் தனுஷ்..... எந்த படத்தில் தெரியுமா?அதாவது ஏற்கனவே நடிகர் தனுஷ் ரூஷோ பிரதர்ஸ் இயக்கத்தில் தி கிரே மேன் படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக மீண்டும் இந்த கூட்டணி புதிய படம் ஒன்றில் இணைய உள்ளது. அதன்படி அவெஞ்சர்ஸ் டூம்ஸ் டே என்ற படத்தில் நடிகர் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் தனுஷ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

MUST READ