Homeசெய்திகள்க்ரைம்கோவை: மாணவியிடம் சில்மிஷம் - போக்ஸோவில் கைதான போலீஸ்

கோவை: மாணவியிடம் சில்மிஷம் – போக்ஸோவில் கைதான போலீஸ்

-

- Advertisement -

கோவை: மாணவியிடம் சில்மிஷம் - போக்ஸோவில் கைதான போலீஸ்மாணவியிடம் சில்மிஷம் செய்து போக்ஸோ வழக்கில் சிக்கிய போலீஸ்.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே கோவில்பாளையம் பகுதியில் தனியாக நின்று பேசிக் கொண்டிருந்த மாணவ, மாணவியை புகைப்படம்‌ எடுத்து மிரட்டி சிறுமியிடம் சில்மிசம் செய்த போலீஸ் போக்ஸோ சட்டத்தில் கைது.

கோவை மாவட்டம், அன்னூர் அருகே கோவில்பாளையம் பகுதியில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவனும், மாணவியும் தனியாக நின்று பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது கோவில்பாளையம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த ரவிக்குமார், மாணவனும் மாணவியும் பேசிக்கொண்டிருந்ததை செல்போனில்
புகைப்படம் எடுத்துள்ளார்.

அதன்பிறகு அவர் அந்த மாணவியை மிரட்டி பணம் கேட்டு மிரட்டியதுடன், மாணவியிடம் சில்மிஷம் செய்து ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த மாணவி அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து பெற்றோர், போலீஸ் ரவிக்குமார் மீது கோவில்பாளையம் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… வடசென்னை ரவுடியின் மகன் அதிரடி கைது

இந்த விசாரணையில் ரவிக்குமார் மாணவியிடம் பணம் கேட்டு மிரட்டியது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ரவிக்குமாரை கைது செய்தனர். மேலும் அவர் மீது ஏற்கனவே பீளமேடு காவல் நிலையத்தில் பல்வேறு முறைகேடு புகார்கள் வந்ததால் கோவில்பாளையம் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வழக்கை சூலூர் மகளிர் காவல் நிலையத்தில் விசாரிக்க காவல்துறையினர் மாற்றம் செய்தனர். இதனை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

MUST READ