Homeசெய்திகள்ஆவடிஆவடியில் கண்டெய்னர் லாரியில் திடீர் தீ விபத்து

ஆவடியில் கண்டெய்னர் லாரியில் திடீர் தீ விபத்து

-

ஆவடியில் கண்டெய்னர் லாரியில் திடீர் தீ விபத்து

ஆவடி கவரபாளையத்தில் கண்டெய்னர் லாரி தீ பிடித்து எரியும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புனேவில் இருந்து இரண்டு சக்கர வாகனங்களை ஏற்றி கொண்டு ஆவடி வந்த கண்டெய்னர் லாரி பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அப்போது எதிர்பாராதா விதமாக மின்கம்பி அறுந்து கன்டயனர் லாரி மீது விழுந்ததால் தீப்பற்றி கொண்டது.

சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் தீ குபு குபு என்று எரிந்ததால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பானது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வாகனம் வேகமாக தீயை அணைத்தனர். அதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

கண்டெய்னர் லாரிக்குள் இருந்த ஒரு இரண்டு சக்கர வாகனம் மட்டும் எரிந்து சேதமடைந்தது. மற்ற வாகனங்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டது.

 

MUST READ