Homeசெய்திகள்இந்தியாரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை... ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை… ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு

-

- Advertisement -

வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் மாற்றமின்றி, வட்டி விகிதம் 6.5 சதவிகிதமாக தொடர்வதாக என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று ரெப்போ வட்டி விகிதம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். அதில், ரிசர்வ் வங்கி பிற வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமில்லை என்று சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். இதனால் ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவிகிதமாக தொடரும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி  6.5 சதவிகிதமாக தொடர்வதால் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் மற்றும், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமுமின்றி பழைய நிலையே நீடிக்கும். முன்னதாக ரெப்போ வட்டி விகிதம் கடந்த ஆண்டு மே மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையேயான கால கட்டத்தில் 250 அடிப்படை புள்ளிகள் உயர்ந்ததால் 6.5 சதவிகிதமாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு தொடர்ந்து 9வது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இன்றி தொடர்கிறது.

MUST READ