Homeசெய்திகள்சினிமாபகத் பாசில் பிறந்தநாளை முன்னிட்டு 'புஷ்பா 2' பட ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு!

பகத் பாசில் பிறந்தநாளை முன்னிட்டு ‘புஷ்பா 2’ பட ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு!

-

அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் புஷ்பா. புஷ்பா முதல் பாகமாக வெளியான இந்த படத்திற்கு புஷ்பா தி ரைஸ் என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது.பகத் பாசில் பிறந்தநாளை முன்னிட்டு 'புஷ்பா 2' பட ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு! இந்த படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கி இருந்தார். படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவும் வில்லனாக பகத் பாசிலும் நடித்திருந்தனர். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகிறார் சுகுமார். புஷ்பா தி ரூல் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசை அமைக்கிறார். புஷ்பா முதல் பாகத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு புஷ்பா இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியான படத்தின் டீசரையும் அதை தொடர்ந்து வெளியான பாடல்களையும் ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். மேலும் இப்படமானது ஏற்கனவே ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் இதன் ரிலீஸ் தேதி டிசம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பகத் பாசில் பிறந்தநாளை முன்னிட்டு 'புஷ்பா 2' பட ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு!இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 8) நடிகர் பகத் பாசிலின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர் ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் இணையத்தில் செம வைரலாகி வருகிறது. ஏற்கனவே முதல் பாகத்தில் பகத் பாசிலின் காட்சிகள் கடைசி 20 நிமிடங்கள் மட்டும்தான் இடம்பெற்றன. ஆனாலும் அவருடைய கதாபாத்திரம் திரையரங்கையை அதிர வைத்தது. எனவே புஷ்பா 2 படம் முழுவதும் பகத் பாசிலின் வில்லத்தனத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ