Homeசெய்திகள்சினிமாவிரைவில் முடிவுக்கு வரும் 'விடாமுயற்சி'.... படப்பிடிப்பை நிறைவு செய்த திரிஷா!

விரைவில் முடிவுக்கு வரும் ‘விடாமுயற்சி’…. படப்பிடிப்பை நிறைவு செய்த திரிஷா!

-

- Advertisement -

துணிவு படத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் விடாமுயற்சி எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷாவும் வில்லனாக அர்ஜுனும் நடித்து வருகின்றனர்.விரைவில் முடிவுக்கு வரும் 'விடாமுயற்சி'.... படப்பிடிப்பை நிறைவு செய்த திரிஷா! மேலும் இவர்களுடன் இணைந்து ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க ஓம் பிரகாஷ் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இதற்கு இசையமைக்கிறார். அஜித்தின் 62 வது படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே அஜர்பைஜானில் தொடங்கப்பட்டு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத் பகுதியில் நடைபெற்று வரும் நிலையில் அடுத்ததாக ஸ்பெயின் நாட்டில் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட உள்ளது. இந்த படத்தில் நடிகர் அஜித் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடிக்கிறார் என்பது படக்குழுவினர் வெளியிட்ட அடுத்தடுத்த போஸ்டர்களின் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த படமானது 2024 தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. விரைவில் முடிவுக்கு வரும் 'விடாமுயற்சி'.... படப்பிடிப்பை நிறைவு செய்த திரிஷா!இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், தற்போது அஜித், ரெஜினா, ஆரவ், அர்ஜுன் ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் திரிஷாவின் காட்சிகள் முழுவதும் நிறைவடைந்துள்ளது. ஆகையினால் இன்னும் ஒரே வாரத்தில் விடாமுயற்சியின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

MUST READ