Homeசெய்திகள்அம்பத்தூரில் துப்புரவு ஆய்வாளர் பெண் பணியாளர்களிடம் ஆபாச பேச்சு

அம்பத்தூரில் துப்புரவு ஆய்வாளர் பெண் பணியாளர்களிடம் ஆபாச பேச்சு

-

அம்பத்தூரில் துப்புரவு ஆய்வாளர் பெண் பணியாளர்களிடம்  ஆபாச பேச்சுஅம்பத்தூரில் துப்புரவு ஆய்வாளர் பெண் பணியாளர்களிடம்  ஆபாச பேச்சு – துப்புரவு பணியாளர்கள் ஜெ.ஜெ நகர் காவல் நிலையத்தில் புகார்.

தன்னை தாக்கிவிட்டதாக துப்புரவு ஆய்வாளரும், பெண் பணியாளர்களிடம் துப்புரவு ஆய்வாளர் ஆபாசமாக பேசுவதாக துப்புரவு பணியாளர்களும் மாறி மாறி புகார். அம்பத்தூர் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்.

சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலம் 93வது வார்டில் அரக்கோணத்தை சேர்ந்த சார்லஸ் ரமேஷ் குமார் என்பவர் துப்புரவு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அதே வார்டில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணி மேற்கொண்டு வரும் ஹரி பிரசாத் என்பவருக்கும் இடையே கடந்த சனிக்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டது.

அம்பத்தூரில் துப்புரவு ஆய்வாளர் பெண் பணியாளர்களிடம் ஆபாச பேச்சு

அப்போது ஹரி பிரசாத் தன்னுடன் பணிபுரியும் இளையகங்கா என்பவருடன் சேர்ந்து இருவரும் துப்புரவு ஆய்வாளர் சார்லஸ் ரமேஷ் குமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் வாய் மற்றும் நெஞ்சு பகுதியில் பலத்த காயம் அடைந்த சார்லஸ் ரமேஷ் குமார் அரக்கோணத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சார்லஸ் ரமேஷ் குமார் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ஜெ.ஜெ நகர் போலீசார், ஹரி பிரசாத், இளையகங்கா இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் துப்புரவு ஆய்வாளர் சார்லஸ் ரமேஷ் குமார் தினமும் மது போதையில் பணிக்கு வருவதாகவும், இரவு நேரங்களில் பெண் பணியாளர்களிடம் ஆபாசமாக பேசுவதாகவும் துப்புரவு பணியாளர்கள் ஜெ.ஜெ நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

சென்னை மாநகராட்சிக்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி – சிக்கலில் அதிகாரிகள்

இதன் அடிப்படையில் போலீசார் துப்புரவு ஆய்வாளர் சார்லஸ் ரமேஷ் குமார் மீது வழக்குபதிவு பதிவு செய்துள்ளனர். மேலும் அம்பத்தூர் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட 200க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள், துப்புர ஆய்வாளர் சார்லஸ் ரமேஷ் குமார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அம்பத்தூரில் துப்புரவு ஆய்வாளர் பெண் பணியாளர்களிடம் ஆபாச பேச்சு

அம்பத்தூர் மண்டல குழு தலைவர் பி.கே மூர்த்தி தலைமையில் அதிகாரிகள் துப்புரவு பணியாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அம்பத்தூர் மண்டல குழு தலைவர் பி.கே மூர்த்தி கூறியதன் அடிப்படையில் அனைவரும் கலைந்து சென்றனர்.

MUST READ