சென்னை தாம்பரத்தில் இருந்து திருச்சிக்கு இன்று இரவு 11 மணிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், வார இறுதி நாளில் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக தாம்பரத்தில் இருந்து முன்பதிவில்லா மெமு ரயில் இன்று இரவு 11 மணிக்கு இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தா ம்பரத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்படும் மெமு சிறப்பு ரயில் நாளை காலை 6.40 மணிக்கு திருச்சியை சென்றடையும். இந்த சிறப்பு ரயில் மறுமார்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5.50 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு ரயில் செங்கல்பட்டு, பண்ருட்டி, சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் வழியாக திருச்சி சென்றடை யும் என்று தெற்கு
ரயில்வே தெரிவித்துள்ளது.