spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்ஈஸியான முட்டை புலாவ் செய்யலாம் வாங்க!

ஈஸியான முட்டை புலாவ் செய்யலாம் வாங்க!

-

- Advertisement -
kadalkanni

முட்டை புலாவ் செய்வது எப்படி?

முட்டை புலாவ் செய்ய தேவையான பொருட்கள்:ஈஸியான முட்டை புலாவ் செய்யலாம் வாங்க!

முட்டை- 4
வெங்காயம் – 1
தக்காளி – 2
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்
தயிர் – 4 ஸ்பூன்
முந்திரிப் பருப்பு – 5
கொத்தமல்லி- சிறிதளவு
பட்டை – 2
லவங்கம் – 2
கிராம்பு – 2
பச்சை மிளகாய் – 2
மிளகாய் தூள்- சிறிதளவு
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
எண்ணெய் மற்றும் நெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
பால் – ஒரு கப்
அரிசி 2 கப்
தண்ணீர் – 3 கப்

முட்டை புலாவ் செய்யும் முறை:ஈஸியான முட்டை புலாவ் செய்யலாம் வாங்க!

முட்டை புலாவ் செய்ய முதலில் மிக்ஸி ஜாரில் பட்டை, லவங்கம், கிராம்பு, தயிர், பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா, முந்திரிப் பருப்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் நான்கு முட்டைகளை வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயம், தக்காளி ஆகிவற்றை நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் ஒரு பாத்திரத்தில் அல்லது குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி மஞ்சள் தூள், மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து வேகவைத்த முட்டைகளை போட்டு வறுக்க வேண்டும். பின்னர் அதை அப்படியே வேறொரு தட்டில் மாற்றிவிட வேண்டும்.

இப்போது அதை பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்க வேண்டும். அடுத்ததாக தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி நன்கு வதங்கிய பின் அரைத்து வைத்திருக்கும் கொத்தமல்லி, புதினா, முந்திரிப் பருப்பு மசாலாவை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை நன்கு வதக்க வேண்டும். ஈஸியான முட்டை புலாவ் செய்யலாம் வாங்க!அதைத்தொடர்ந்து ஒரு கப் பால் மற்றும் 3 கப் அளவு தண்ணீர் சேர்த்து அரிசியையும் நன்கு கழுவி சேர்த்து விட வேண்டும். இப்போது பாத்திரத்தை மூடி வைத்து 15 நிமிடங்கள் வேகவைக்க வேண்டும். கடைசியாக வறுத்து வைத்திருக்கும் முட்டையை சேர்த்து மெதுவாக கிளறி விட வேண்டும். அவ்வளவுதான் ஈஸியான முட்டை புலாவ் தயார். நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள்.

MUST READ