Homeசெய்திகள்இந்தியா"Something big soon India" இந்தியாவில் நடக்க உள்ள பெரிய சம்பவம்?: ஹிண்டன்பர்க் பதிவால் பரபரப்பு

“Something big soon India” இந்தியாவில் நடக்க உள்ள பெரிய சம்பவம்?: ஹிண்டன்பர்க் பதிவால் பரபரப்பு

-

- Advertisement -

"Something big soon India" இந்தியாவில் நடக்க உள்ள பெரிய சம்பவம்?: ஹிண்டன்பர்க் பதிவால் பரபரப்பு

“Something big soon India” என ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

8 நவம்பர் 2016 அன்று அனைத்து ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என இந்திய அரசு அறிவித்தது. பணமதிப்பு நீக்கம் (DEMONETIZATION) செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய ₹500 மற்றும் ₹2,000 நோட்டுகளை வெளியிடுவதாகவும் அறிவித்தது. இது போன்று ஏதாவது நடக்க போகிறதா? பீதியில் மக்கள்.

இவர் சொன்ன சரியா இருக்குமே- னு நம்பிக்கை!

ஹிண்டன்பர்க் (Hindenburg) பெரிய நிறுவனங்களில் நிகழும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து ஆய்வு நடத்தி அது குறித்த அறிக்கைகள் மற்றும் முதலீட்டாளர்களைப் பாதுகாப்பதிலும் முக்கியப் பங்கு வகித்து வருவதாக கூறப்படுகிறது.

இன்று காலை ஹிண்டன்பர்க் ரிசர்ச் தனது எக்ஸ் பக்கத்தில் ”Something big soon India” அதாவது ”இந்தியாவில் பெரிதாக ஒன்று நடக்க உள்ளது” என அதிர்ச்சியாளிக்கும் விதமாக ஒரு பதிவிட்டுள்ளது. இந்த பதிவு உலக அளவில் பேசுபொருளாகி உள்ளது.
ஹிண்டன்பர்க் ஒரு நிறுவனம் குறித்த ஆய்வுக்குப் பிறகு தனது வலைத்தளம் வழியாக அந்த நிறுவனத்தின் மோசடிகள் மற்றும் முறைகேடுகளை குறித்த அறிக்கைகளை வெளியிடும்.

"Something big soon India" இந்தியாவில் நடக்க உள்ள பெரிய சம்பவம்?: ஹிண்டன்பர்க் பதிவால் பரபரப்பு

இவர்கள் வெளியிடும் அறிக்கைகள் மோசடிகளை அமல்படுத்துவதிலும் முதலீட்டாளர்களை பாதுகாப்பதிலும் முக்கியப் பங்கு வதிப்பதாக கூறப்படுகிறது. இவர்களின் ஆய்வரிக்கள் நம்பும் விதமாகவே அமைந்துள்ள தெனவும் கூறுகின்றனர்.

2023 ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவின் அதானி குழுமத்தில் பங்கு மதிப்பை உயர்த்திக் காட்டி, அதன் மூலம் அதிகக் கடன் பெறுதல், போலி நிறுவனங்களைத் தொடங்கி, வரி ஏய்ப்பு செய்தல் உள்ளிட்ட முறைகேடுகள் நடப்பதாகக் கூறி அறிக்கை வெளியிட்டது.

அதனைத் தொர்ந்து அதானி குழும பங்குகள் சரிவை சந்தித்தது. மேலும் வெளியிட்ட அறிக்கை ஆதாரமற்றவை என்று அதானி குழுமம் மறுத்தது.

பின்னர் தங்களது இந்த அறிக்கை தவறு என்று கருதினால், அதானி குழுமம் தங்கள் மீது வழக்குத் தொடரலாம் என ஹிண்டன்பர்க் அழைப்பு விடுத்திருந்தது.

நாடாளுமன்றத்திலும் இது பற்றி விவாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் ஹிண்டன்பர்க் தனது எக்ஸ் பக்கத்தில், “Something big soon India” என பதிவிட்டுள்ளது உலகளவில் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது மற்றும் இந்த ஹிண்டன்பர்க் அறிக்கை யாரை பற்றியதாக இருக்கும் என சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தகுதி நீக்கத்தில் தப்பி பதக்கத்தை வென்ற அமன்

ஏற்கனவே இந்திய நாட்டு சூழ்நிலை கவலைக்கிடமாகவே உள்ள நிலையில் இந்த அறிக்கை தலை மேல் குண்டு போட்டது போல உள்ளது என மக்கள் பீதியடைந்துள்ளனர்.

இன்னும் என்ன நடக்க போகிறது? 

MUST READ