Homeசெய்திகள்விளையாட்டுடெல்லி திரும்பிய இந்திய ஹாக்கி அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

டெல்லி திரும்பிய இந்திய ஹாக்கி அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

-

- Advertisement -

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று தாயகம் திரும்பிய இந்திய ஹாக்கி அணி வீரர்களுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் ஹர்மன்பிரித் சிங் தலைமையிலான இந்திய அணி வெண்கலப்பதக்கம் வென்றது. ஒலிம்பிக் போட்டியில் தொடர்ந்து 2வது முறையாக பதக்கம் வென்று சாதனைப்படைத்தது. இந்நிலையில், பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணி வீரர்கள் சிறப்பு விமானத்தில் டெல்லி வந்தடைந்தனர். டெல்லி விமான நிலையத்தில்ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், ரசிகர்கள் நடனம் ஆடி வீரர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதனை தொடர்ந்து, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மாண்சுக் மாண்டவியா இந்திய அணி வீரர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது வீரர்கள் கையொப்பமிட்ட ஜெர்சி அமைச்சருக்கு பரிசளிக்கப்பட்டது. தொடர்ந்து, டெல்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் நினைவிடத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு இந்திய அணி வீரர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும், அவரது சிலையின் முன்பாக புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.

MUST READ