Homeசெய்திகள்தமிழ்நாடுஅண்ணா பல்கலை.யை வழிநடத்த நிர்வாக ஒருங்கிணைப்புக்குழு

அண்ணா பல்கலை.யை வழிநடத்த நிர்வாக ஒருங்கிணைப்புக்குழு

-

- Advertisement -

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வேல்ராஜின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, பல்கலைக்கழகத்தை வழிநடத்த நிர்வாக ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பொறுப்பு வகித்த வேல்ராஜின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவடைந்தது. இதனை அடுத்து, அண்ணா பல்கலைக் கழகத்தினை வழிநடத்துவதற்காக உயர்கல்வித்துறைச் செயலாளர் பிரதீப் யாதவ் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஒருங்கிணைப்புக்குழுவில் தொழில்நுட்ப கல்வி இயக்குனரக ஆணையர் ஆபிரகாம், அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர் உஷா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

செமஸ்டர் தேர்வு திடீரென ஒத்திவைப்பு

தமிழ்நாட்டில் ஏற்கனவே சென்னை பல்கலைக் கழகம், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகிய 4 பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்கள் நியமிக்கப்படாமல் உள்ளனர். இந்த நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஓய்வுபெற்றதால் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் காலி இடங்கள் 5 ஆக அதிகரித்துள்ளது.

MUST READ