Homeசெய்திகள்சினிமாசிறுத்தை சிவா, சூர்யா கூட்டணியில் தீப்பொறி பறக்கும் 'கங்குவா' பட டிரைலர்!

சிறுத்தை சிவா, சூர்யா கூட்டணியில் தீப்பொறி பறக்கும் ‘கங்குவா’ பட டிரைலர்!

-

- Advertisement -

சிறுத்தை சிவா, சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள கங்குவா படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.சிறுத்தை சிவா, சூர்யா கூட்டணியில் தீப்பொறி பறக்கும் 'கங்குவா' பட டிரைலர்!

நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்திற்குப் பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சிறுத்தை சிவா, சூர்யா கூட்டணியில் தீப்பொறி பறக்கும் 'கங்குவா' பட டிரைலர்!மிகவும் பிரம்மாண்டமாக மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள இந்த படமானது வருகின்ற அக்டோபர் 10 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. 3D தொழில்நுட்பத்தில் பீரியாடிக் படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது. படத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் நடிகர் கார்த்தியும் இந்த படத்தில் இணைந்திருக்கிறார். படமானது இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் அடுத்தடுத்த போஸ்டர்களும் வெளியாகிய ரசிகர்களின் கவனம் பெற்றது. இவ்வாறு படத்தின் மீதான எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் அதிகப்படுத்தும் விதமாக ஒவ்வொரு அப்டேட்டுகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அதன்படி நீண்ட நாட்களாக ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த கங்குவா படத்தின் டிரைலர் இன்று (ஆகஸ்ட் 12) சிறுத்தை சிவாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி உள்ளது. இந்த ட்ரெய்லரில் அதிரடியான ஆக்சன் காட்சிகள் காட்டப்படுகின்றன. டிரெய்லரின் ஒவ்வொரு காட்சிகளிலும் பிரம்மாண்டம் காட்டப்படுகிறது. நடிகர் சூர்யா தனது கர்ஜிக்கும் குரலில் தெறிக்க விடுகிறார். மேலும் மிரட்டலான பின்னணி இசையுடன் தீப்பொறி பறக்கும் இந்த ட்ரெய்லரின் இறுதியில் நடிகர் கார்த்தி காட்டப்படுகிறார். இந்த அதிரடி கிளப்பும் ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை நூறு மடங்கு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ