Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்வயிற்றுப் புழுக்களை நீக்கும் நார்த்தங்காய் பச்சடி செய்வது எப்படி?

வயிற்றுப் புழுக்களை நீக்கும் நார்த்தங்காய் பச்சடி செய்வது எப்படி?

-

- Advertisement -

நார்த்தங்காய் பச்சடி செய்ய தேவையான பொருட்கள்:வயிற்றுப் புழுக்களை நீக்கும் நார்த்தங்காய் பச்சடி செய்வது எப்படி?

நார்த்தங்காய் – 4
புளி – நெல்லிக்காய் அளவு
பச்சை மிளகாய் – 15
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை
சர்க்கரை – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு தேவையான பொருட்கள்:

எண்ணெய் – 3 ஸ்பூன்
கடுகு – ஒரு ஸ்பூன்
பொட்டுக்கடலை – 3 ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
பெருங்காயம் – 1 சிறிய கட்டி

செய்முறை:

நார்த்தங்காய் பச்சடி செய்ய முதலில் நார்த்தங்காய் வெட்டி விதைகளை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் இஞ்சியை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.வயிற்றுப் புழுக்களை நீக்கும் நார்த்தங்காய் பச்சடி செய்வது எப்படி?

அடுத்தது புளியை தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

இப்போது ஒரு பாத்திரத்தில் நறுக்கிய நார்த்தங்காய், உப்பு, புளி, சிறிதளவு நீர் ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.

பின்னர் மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் எண்ணெய் ஊற்றி கடுகு, பொட்டுக்கடலை, கருவேப்பிலை, பெருங்காயத்தூள் ஆகியவற்றை போட்டு தாளிக்க வேண்டும். பின்னர் அதை அப்படியே எடுத்து தயாராகி வரும் பச்சடியில் கொட்ட வேண்டும். இப்போது பச்சடி நன்கு கொதித்து ஓரளவிற்கு கெட்டியான பதம் வந்ததும் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி விட வேண்டும். இப்போது அடுப்பை அணைத்து ஆற வைக்க வேண்டும்.வயிற்றுப் புழுக்களை நீக்கும் நார்த்தங்காய் பச்சடி செய்வது எப்படி?

அருமையான நார்த்தங்காய் பச்சடி தயார். நீங்களும் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க.

நார்த்தங்காய் என்பது வயிற்றுப் புழுக்களை நீக்கவும், பசியை அதிகரிக்கவும் உதவக்கூடியது. மேலும் இது ரத்தத்தை சுத்திகரிக்கவும் நல்ல மருந்தாக பயன்படுகிறது.

 

MUST READ