ஆவடி நேரு பஜார் மார்க்கெட் நடைபாதை, ஆக்கிரமிப்பு கடைகளை அதிரடியாக அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆவடி நேரு பஜாரில் பேருந்து பயணிகள், ரயில் பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில், நடைபாதை மற்றும் சாலையை ஆக்கிரமித்து சுமார் 300க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் செயல்பட்டு வந்தது.
ஆக்கிரமிப்பு அதிகமானதால் சாலையும் 10 அடியாக குறுகியது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலும் அதிகளவில் ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்த அதிகாரிகள் நடைபாதை மற்றும் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் அங்கு வாலிபர் ஒருவர், ட்ரான்ஸ்பார்மரில் இரும்பு பழுப்புகளை வைத்து,கயிறால் கட்டி செருப்பு விற்பனையில் ஈடுபட்டதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து வாலிபரை எச்சரிக்கை செய்து உடனடியாக கடையை அகற்றினர்.
கிரிக்கெட் வீரர் சச்சினுக்கு என் மகளை திருமணம் முடிக்க பயந்தேன்- மாமியார் அன்னபெல் மேத்தா
தொடர்ந்து போக்குவரத்து போலீசார், நெடுஞ்சாலை துறை மற்றும் ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்றியதுடன்,விளம்பர பலகைகள் உட்பட பல பொருட்களை பறிமுதல் செய்து மாநகராட்சி வாகனத்தில் எடுத்து சென்றனர்.
மேலும் ஜே.சி.பி இயந்திரம் வரவழைத்து நடைபாதை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகள் இடித்து அகற்றப்பட்டது.இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியதால் பாதுகாப்பிற்கு போலீசாரும் குவிக்கப்பட்டனர்.