Homeசெய்திகள்சினிமாவிக்ரம் குரலில் 'தங்கலான்' பட 'அறுவடை' பாடல் வெளியீடு!

விக்ரம் குரலில் ‘தங்கலான்’ பட ‘அறுவடை’ பாடல் வெளியீடு!

-

தங்கலான் படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகியுள்ளது.விக்ரம் குரலில் 'தங்கலான்' பட 'அறுவடை' பாடல் வெளியீடு!

விக்ரம் நடிப்பில் தங்கலான் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை பா ரஞ்சித் இயக்கியுள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஜிவி பிரகாஷின் இசையிலும் இப்படம் உருவாகி இருக்கிறது. மேலும் கிஷோர் குமார் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக பார்வதி நடித்துள்ளார். வில்லனாக டேனியல் கால்டகிரோன் நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் படும் அவதியை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே படத்தின் டீசரும் அதைத் தொடர்ந்து ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அடுத்ததாக படத்தின் அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி கவனம் பெற்று வருகின்றன.

அந்த வகையில் ஏற்கனவே முதல் இரண்டு பாடல்கள் வெளியான நிலையில் தற்போது அறுவடை எனும் மூன்றாவது பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் இந்த படத்தில் நடிகர் விக்ரம் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் எனவும் அதனை பட குழுவினர் சர்ப்ரைஸாக வைத்திருக்கிறார்கள் எனவும் சொல்லப்படுகிறது. இந்தப் பாடலை நடிகர் விக்ரம் பாடி உள்ளார். அவருடன் இணைந்து சிந்துரி விஷால, சுகந்தி, மதிசியாம் பாலா உள்ளிட்டோர் பாடியுள்ளனர். பாடல்வரிகளை உமாதேவி எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தந்தது.

MUST READ