Homeசெய்திகள்சென்னைதாய்லாந்திலிருந்து விமானத்தில் கடத்திவந்த அரிய வகை உயிரினங்கள் பறிமுதல்

தாய்லாந்திலிருந்து விமானத்தில் கடத்திவந்த அரிய வகை உயிரினங்கள் பறிமுதல்

-

- Advertisement -

தாய்லாந்திலிருந்து, சென்னைக்கு விமானத்தில் அரிய வகை மலைப் பாம்புகள், ஆப்பிரிக்க கருங்குரங்கு உள்ளிட்டவற்றை கடத்திவந்த நபரை சுங்க அதிகாரிகள் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து நேற்று இரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு தனியார் விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளையும் அவர்களது உடமைகளையும் சுங்க அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, சந்தேகத்துக்கிடமாக இருந்த சென்னையை சேர்ந்த பயணி ஒருவரை நிறுத்தி, அவரது உடமைகளை சோதனையிட்டனர்.

அப்போது பிளாஸ்டிக் கூடைகளுக்குள் மறைத்து 2 மலைப்பாம்புகள், ஆப்பிரிக்க கருங்குரங்கு, அரிய வகை ஆமைகள், அரிய வகை அணில் ஆகியவற்றை கடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, அவற்றை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், அந்த பயணியை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தகவலின் பேரில் அங்கு வந்த மத்திய வன உயிரின குற்றப்பிரிவு அதிகாரிகள், அந்த பயணியிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் வடசென்னை பகுதியை சேர்ந்த நபர் அவற்றை கடத்திவர சொல்லியது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த நபரின் இல்லத்தில் சோதனையிட்ட அதிகாரிகள், அங்கிருந்த அரிய வகை உயிரினங்களை பறிமுதல் செய்தன்ர்.

MUST READ