Homeசெய்திகள்சினிமாஇன்று வெளியாகும் 'கோட்' பட டிரைலர் அப்டேட்.... அர்ச்சனா கல்பாத்தி!

இன்று வெளியாகும் ‘கோட்’ பட டிரைலர் அப்டேட்…. அர்ச்சனா கல்பாத்தி!

-

- Advertisement -

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கோட்.இன்று வெளியாகும் 'கோட்' பட டிரைலர் அப்டேட்.... அர்ச்சனா கல்பாத்தி! இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜாவின் இசையிலும் சித்தார்த்தா நுனியின் ஒளிப்பதிவிலும் இப்படம் தயாராகி இருக்கிறது. படத்தில் நடிகர் விஜய் அப்பா மற்றும் மகன் என இரட்டை வேடங்களில் நடிக்க அவருக்கு ஜோடியாக சினேகாவும் மீனாட்சி சௌத்ரியும் நடித்திருக்கின்றனர். மேலும் இவர்களுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, லைலா, மைக் மோகன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக திருவனந்தபுரம், ரஷ்யா போன்ற பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதாவது கோட் என்று சொல்லப்படும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் வருகின்ற செப்டம்பர் 5 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. மேலும் இந்த படமானது ஐமேக்ஸ் ஈபிஐக்யூ என தொழில்நுட்பம் மேம்பட்ட திரைகளின் திரையிடப்பட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே ரசிகர்கள் பலரும் படத்தை திரையரங்குகளில் காண மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.இன்று வெளியாகும் 'கோட்' பட டிரைலர் அப்டேட்.... அர்ச்சனா கல்பாத்தி! அதற்கு முன்பாக படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்து வரும் நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகும் என சமீப காலமாக சமூக வலைதளங்களை செய்திகள் பரவி வருகிறது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது சமூக வலைதள பக்கத்தில் கோட் படத்தின் டிரைலர் குறித்த அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், “நாங்கள் உங்களுக்காக அற்புதமான ட்ரைலரை உருவாக்கி வருகிறோம். எங்களுக்கு இரண்டு நாட்கள் அவகாசம் கொடுங்கள். நாளை உங்களுக்கு சரியான அப்டேட்டை தருகிறோம்” என இன்று (ஆகஸ்ட் 13) கோட் படத்தின் டிரைலர் குறித்து அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார் அர்ச்சனா கல்பாத்தி.

MUST READ