தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வினேஷ் போகத் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வரும் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த 50 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், போட்டிக்கு முன்னதாக 100 கிராம் எடை கூடுதலாக உள்ளதாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து வினேஷ் போகத், சர்வதேச விளையாட்டு தேர்வு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த சர்வதேச விளையாட்டு தேர்வு தீர்ப்பாய நிதிபதி முதலில் போட்டி முடியும் முன்பாக தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தார். பின்னர் தீர்ப்பு நேற்று வழங்கப்படும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வினேஷ் போகத் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு வரும் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. சர்வதேச தீர்ப்பாயம் ஏற்கனவே 2 முறை தீர்ப்பை ஒத்திவைத்த நிலையில், தற்போது 3வது முறையாக ஒத்திவைத்துள்ளது.