Homeசெய்திகள்சினிமா'கல்கி 2898AD' படத்தில் கமலுக்கு பதில் வில்லனாக நடிக்க இருந்தது யார் தெரியுமா?

‘கல்கி 2898AD’ படத்தில் கமலுக்கு பதில் வில்லனாக நடிக்க இருந்தது யார் தெரியுமா?

-

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் தமிழ் ரசிகர்களால் உலகநாயகன் என்று கொண்டாடப்படுகிறார். 'கல்கி 2898AD' படத்தில் கமலுக்கு பதில் வில்லனாக நடிக்க இருந்தது யார் தெரியுமா?இவரது நடிப்பில் உருவாகி இருந்த இந்தியன் 2 திரைப்படம் கடந்த ஜூலை மாதம் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. அதற்கு முன்பாக கமல்ஹாசன், கல்கி 2898AD எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் யாஸ்கின் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவருடைய காட்சிகள் சில நிமிடங்களே இடம் பெற்று இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து கல்கி 2898AD இரண்டாம் பாகத்திலும் கமல்ஹாசனின் கதாபாத்திரம் ஸ்ட்ராங்காக வடிவமைக்கப்பட்டிருக்கும் என நம்பப்படுகிறது. இந்நிலையில் கமல்ஹாசன் நடித்திருந்த அந்த யாஸ்கின் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது வேறொரு நடிகராம். அந்த நடிகர் வேறு யாருமில்லை மோகன்லால் தான் என்று சொல்லப்படுகிறது. 'கல்கி 2898AD' படத்தில் கமலுக்கு பதில் வில்லனாக நடிக்க இருந்தது யார் தெரியுமா?ஒரு சில காரணங்களால் மோகன்லால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியாமல் போனதாகவும் அவருக்கு பதிலாக நடிகர் கமல்ஹாசன் களமிறங்கினார் எனவும் புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி, பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். வைஜெயந்தி நிறுவனம் தயாரித்திருந்த இந்த படம் கிட்டத்தட்ட 1100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. விரைவில் இப்படம் ஓடிடியிலும் வெளியாக இருக்கிறது.

MUST READ