Homeசெய்திகள்சினிமா'தி கோட்' படத்திலிருந்து புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!

‘தி கோட்’ படத்திலிருந்து புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!

-

- Advertisement -

விஜய் நடிப்பில் தி கோட் திரைப்படம் உருவாகி இருக்கிறது. விஜயின் 68வது படமான இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். 'தி கோட்' படத்திலிருந்து புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பிலும் யுவன் சங்கர் ராஜாவின் இசையிலும் படம் உருவாகி இருக்கிறது. சித்தார்த்தா நுனி இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்து வருகிறார். படத்தில் நடிகர் விஜய் அப்பா – மகன் என இரட்டை வேடங்களில் நடிக்க அவருக்கு ஜோடியாக சினேகா மற்றும் மீனாட்சி சௌத்ரி ஆகிய இருவரும் நடித்துள்ளனர். மேலும் படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், லைலா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'தி கோட்' படத்திலிருந்து புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்ததாக சொல்லப்படுகிறது. அதே சமயம் போஸ்டர் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் இந்த படத்தின் கிளிம்ப்ஸ், அடுத்தடுத்த போஸ்டர்கள், பாடல்கள் வெளியாகி வருகின்றன. விரைவில் இந்த படத்தின் டிரைலர் வெளியாக இருக்கிறது. விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோர் இந்த படத்தில் தீவிரவாதத்திற்கு எதிராக செயல்படுபவர்களாக நடிகருக்கின்றனர்.'தி கோட்' படத்திலிருந்து புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல்! கடந்த காலத்தில் இவர்கள் செய்த ஒரு பிரச்சனை நிகழ்காலத்தில் இவர்களுக்கு எதிராக தலை தூக்குகிறது. அதை இவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பது தான் கதை என சமீபத்தில் நடந்த பேட்டியில் வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார். எனவே ரசிகர்கள் பலரும் வருகின்ற செப்டம்பர் 5 அன்று தரமான சம்பவம் காத்திருக்கிறது என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இவ்வாறு படம் தொடர்பாக வெளியாகும் ஒவ்வொரு அப்டேட்டுகளும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டி வரும் நிலையில் படத்திலிருந்து சில புகைப்படங்களும் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.

MUST READ