இன்று ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான், அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள டிமான்ட்டி காலனி 2, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ரகு தாத்தா ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வருகிறது. இந்தப் படங்களைக் காண ரசிகர்கள் பலரும் திரையரங்கிற்கு படையெடுத்து செல்கின்றனர். இந்த மூன்று படங்களுமே மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இன்று வெளியாகிறது.
தங்கலான்
விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படத்தை பா ரஞ்சித் இயக்கியுள்ளார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. படத்தில் விக்ரம், பார்வதி ,பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி வி பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார்.
டிமான்ட்டி காலனி 2
அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் டிமான்ட்டி காலனி 2. அதை ஞானமுத்து இந்த படத்தை இயக்க படத்தில் ப்ரியா பவானி சங்கர் அருள்நிதியுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்திற்கு ஷாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.
ரகு தாத்தா
கீர்த்தி சுரேஷ் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி வரும் நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் ரகு தாத்தா. காமெடி கலந்த கதைகளத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஷான் ரோல்டன் இதற்கு இசையமைத்துள்ளார்.
Feeling so elated and privileged to have a release along side with Vikram sir, the man whose posters from Anniyan were on my study table! Wishing you @chiyaan sir , my dear @MalavikaM_ , @beemji sir, @StudioGreen2 and your team a great success for #Thangalaan ! 🤗❤️
Wishing…
— Keerthy Suresh (@KeerthyOfficial) August 14, 2024
இந்நிலையில் இந்த மூன்று படங்களும் இன்று வெளியாகும் நிலையில் பிரபலங்கள் மாறி மாறி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ், தங்கலான் மற்றும் டிமான்ட்டி காலனி 2 ஆகிய படங்கள் வெற்றி பெற வேண்டும் என படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய ரகு தாத்தா திரைப்படமும் வெற்றி பெற வேண்டுமென படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Bestest wishes to beloved @chiyaan sir for #Thangalaan Wishing you nothing short of a blockbusterrrr for all your efforts and hardwork sir ❤️❤️ Bestest wishes @beemji brother. Can’t wait to watch the world you have created!!🔥 @StudioGreen2 @kegvraja sirrr you have believed this…
— Ajay R Gnanamuthu (@AjayGnanamuthu) August 14, 2024
அதேபோல் டிமான்ட்டி காலனி 2 படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து, தங்கலான் படத்திற்கும் விக்ரம், ஞானவேல் ராஜா, பா ரஞ்சித், மாளவிகா மோகனன், ஜிவி பிரகாஷ் ஆகிய பட குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம், அஜய் ஞானமுத்துவிற்கு நன்றி தெரிவித்து டிமான்ட்டி காலனி 2 திரைப்படம் வெற்றி பெற வாழ்த்தியுள்ளது.
Thank you @AjayGnanamuthu sir for your kind words 🌟 All the best for #DemonteColony2 🌟💐💐 https://t.co/k3z8DR0RXZ
— Studio Green (@StudioGreen2) August 14, 2024
ஒரே நாளில் போட்டி போடும் திரைப்படங்களாக இருந்தாலும், பிரபலங்கள் இவ்வாறு மாறி மாறி வாழ்த்து தெரிவித்துக் கொள்ளும் செயல், என்றைக்கும் அவர்கள் சினிமா என்ற ஒரே குடும்பம் தான் என்பதை நிரூபித்துள்ளது.