Homeசெய்திகள்க்ரைம்மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்த கா்ப்பிணி சிகிச்சை பலனின்றி பலி

மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்த கா்ப்பிணி சிகிச்சை பலனின்றி பலி

-

- Advertisement -

திருச்சி மாவட்டம், நொச்சியம் பகுதியில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்த கா்ப்பிணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா் .

மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்த கா்ப்பிணி சிகிச்சை பலனின்றி பலிநொச்சியம் கீழத்தெருவைச் சோ்ந்தவா் அரவிந்த் (30), கொத்தனாா். இவரது மனைவி கல்பனா (26). இருவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி ஒன்றரை வயதில் குழந்தை உள்ள நிலையில், கல்பனா 7 மாத கா்ப்பிணியாக இருந்தாா்.

இதனிடையே கணவருடன் ஏற்பட்ட தகராறில் கடந்த சில தினங்களுக்கு முன் கல்பனா மண்ணென்ணெய் ஊற்றிக் தீக்குளித்தாா். இதையடுத்து ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட கல்பனா, பின்னா் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், அங்கு கல்பனாவிற்கு அறுவை சிகிச்சை செய்து எடுக்கப்பட்ட குழந்தை இறந்தது. இந்நிலையில் கல்பனை புதன்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து மண்ணச்சநல்லூா் போலீஸாா் விசாரிக்கின்றனா். மேலும் லால்குடி வருவாய்க் கோட்டாட்சியரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ