Homeசெய்திகள்சினிமாஏகபோக வரவேற்பை பெற்ற 'கங்குவா' பட ட்ரெய்லர்..... அடுத்த ட்ரெய்லர் எப்போது?

ஏகபோக வரவேற்பை பெற்ற ‘கங்குவா’ பட ட்ரெய்லர்….. அடுத்த ட்ரெய்லர் எப்போது?

-

- Advertisement -

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் வருகின்ற அக்டோபர் 10 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. ஏகபோக வரவேற்பை பெற்ற 'கங்குவா' பட ட்ரெய்லர்..... அடுத்த ட்ரெய்லர் எப்போது?இந்த படத்தை ஸ்டூடியோ கிரேன் நிறுவனம் தயாரிக்க சிறுத்தை சிவா இயக்கியிருக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். படத்தில் சூர்யா, திஷா பதானி, யோகி பாபு, கோவை சரளா, பாபி தியோல் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மேலும் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கும் இந்த படத்தில் நடிகர் கார்த்தியும் இணைந்திருக்கிறார். அதாவது நடிகர் கார்த்தி சூர்யாவிற்கு வில்லனாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. 3D தொழில்நுட்பத்தில் பீரியாடிக் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்தில் இருந்தே அதிகமாக இருந்து வந்த நிலையில் சூர்யாவிற்கு கார்த்தி வில்லனாக நடித்திருப்பது எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக அதிகப்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கங்குவா படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் இணையத்தில் வெளியிடப்பட்டது.ஏகபோக வரவேற்பை பெற்ற 'கங்குவா' பட ட்ரெய்லர்..... அடுத்த ட்ரெய்லர் எப்போது? பிரம்மாண்டமாக வெளியான அந்த ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று இணையத்தில் வைரலானது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான தங்கலான் படத்துடன் கங்குவா பட ட்ரெய்லரும் ஒளிபரப்பப்பட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. எனவே படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில் அது தொடர்பான தற்போது புதிய அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி செப்டம்பர் 15ஆம் தேதி கங்குவா படத்தில் இரண்டாவது ட்ரெய்லர் வெளியாகும் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ