Homeசெய்திகள்இந்தியாகர்நாடக முதல்வர் மீது விசாரணை - ஆளுநரின் சட்டவிரோத செயல்

கர்நாடக முதல்வர் மீது விசாரணை – ஆளுநரின் சட்டவிரோத செயல்

-

- Advertisement -

கர்நாடக ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறார். என் மீது விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பானது அதை நாங்கள் சட்டபூர்வமாக ஒன்றுபட்டு எதிர்கொள்வோம். நான் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற பேச்சுக்கு இடமில்லை. கர்நாடக முதல்வர் சித்தராமையா பேட்டி.

கர்நாடக முதல்வர் மீது விசாரணை - ஆளுநரின் சட்டவிரோத செயல்இதுகுறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியதாவது, நான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள். அதற்கான எந்த தவறையும் நான் செய்யவில்லை. அவர்கள் தவறு செய்து வருகின்றனர் அவர்கள் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டு வருகின்றனர்.

 

அவர்கள் அரசியல் சட்ட அமைப்புக்கு எதிராக செயல்படுகின்றனர் அவர்கள் ராஜ் பவனை அரசியல் மையப் புள்ளியாக மாற்றி வருகின்றனர். ராஜ் பவனில் உள்ள ஆளுநர் மத்திய அரசுடன் கைகோர்த்து கொண்டு அவர்களின் கை பாவையாக செயல்பட்டு வருவதாக சித்தராமையா தெரிவித்துள்ளார்.

MUST READ