Homeசெய்திகள்க்ரைம்திசையன்விளை அருகே அண்ணன், தம்பி கத்தியால் குத்திக்கொலை... கோவில் கொடை விழாவில் பயங்கரம்

திசையன்விளை அருகே அண்ணன், தம்பி கத்தியால் குத்திக்கொலை… கோவில் கொடை விழாவில் பயங்கரம்

-

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கோவில் கொடை விழாவில் ஏற்பட்ட தகராறில் அண்ணன், தம்பி குத்திகொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கக்கன் நகர் பகுதியில் சுடலை மாட சுவாமி கோவில் கொடை விழா நடைபெற்றது. கொடை விழாவையொட்டி நேற்று நள்ளிரவில் கோவிலில் கரகாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, திடீரென கரகாட்ட நிகழ்ச்சி நிறுத்தப்பட்டதால் அதே பகுதியை சேர்ந்த முருகன் மற்றும் முருகேஷ்வரி குடும்பத்தினர் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.

அப்போது, முருகேஸ்வரியின் மகன்கள் ஆட்டினை அறுக்கும் கத்தியை கொண்டு முருகன் தரப்பினரை சரமாரியாக குத்தினர். இதில் பலத்த காயம் அடைந்த முருகனின் மகன்கள் மதியழகன், மதிராஜா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் முருகனின் மற்றொரு மகனான மகேஸ்வரன் பலத்த காயம் அடைந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை காவல்துறையினர், காயம் அடைந்த மகேஸ்வரனை சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

130 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற ரயில்
130 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற ரயில்

மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, முக்கிய கொலையாளிகளான முருகேஸ்வரின் மகன்கள் விபின், ராஜ்குமார், வருண்குமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 5 பேரை தேடி வருகின்றனர். இதனிடையே இரட்டைகொலையால் கக்கன் நகர் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

MUST READ