நடிகர் விஜய், லியோ படத்திற்கு பிறகு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்று சொல்லப்படும் (கோட்) திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் விஜயுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மைக் மோகன் என பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்து வருகின்ற செப்டம்பர் 5 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வர இப்படம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதன்படி ஏற்கனவே அடுத்தடுத்த பாடல்களும் போஸ்டர்களும் வெளியிடப்பட்ட நிலையில் நேற்று (ஆகஸ்ட் 17) கோட் படத்தின் டிரைலரை பட குழு வெளியிட்டது. ஏற்கனவே வெளியான பாடல்கள் போதுமான அளவு திருப்தியை தரவில்லை என்றாலும் நேற்று வெளியான ட்ரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இணையத்தில் செம வைரலாகி வருகிறது. இரட்டை வேடங்களில் விஜய் மிரட்டி இருக்கிறார். அதுவும் டிஏஜிங் தொழில்நுட்பத்தின் மூலம் விஜயை இளமையான தோற்றத்தில் காட்டி இருப்பது மீண்டும் இளைய தளபதியை பார்த்த உற்சாகத்தில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். எனவே திரையரங்குகளிலும் தளபதியையும் இளைய தளபதியையும் ஒரே படத்தில் காண ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் தி கோட் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய வெங்கட் பிரபு, நடிகர் அஜித் கோட் படத்தின் டிரைலரை பார்த்த பிறகு படக்குழுவை பாராட்டியதாக தெரிவித்துள்ளார். “டேய் சூப்பரா இருக்குடா விஜய்க்கும் அவரது டீமுக்கும் வாழ்த்துக்கள் சொன்னேனு சொல்லு” என்று அஜித் சொன்னதாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
- Advertisement -