பிரபல மலையாள நடிகர் மோகன்லால் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக உள்ளவர் மோகன்லால். இவர் தற்போது பிரத்விராஜ் இயக்கத்தில் லூசிபர் திரைப்படத்தின் 2-ஆம் பாகத்தில் நடித்து வந்தார். எல் 2 எம்புரான்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, நடிகர் மோகன்லால் குஜராத்தில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்குத் திரும்பினார். அங்கு மோகன்லாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவர் கொச்சியில் அமிர்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மோகன் லால் உடல் நிலை குறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதீத காய்ச்சல், மூச்சுத்திணறல் மற்றும் தசைவலி ஆகிய பாதிப்பு காரணமாக நடிகர் மோகன்லால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், அவர் 5 நாட்கள் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் கூட்டம் நிறைந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.