Homeசெய்திகள்சினிமாபிரபல பாலிவுட் ஸ்டார் நடிகரை இயக்கும் லோகேஷ் கனகராஜ்!

பிரபல பாலிவுட் ஸ்டார் நடிகரை இயக்கும் லோகேஷ் கனகராஜ்!

-

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் நுழைந்தவர். பிரபல பாலிவுட் ஸ்டார் நடிகரை இயக்கும் லோகேஷ் கனகராஜ்!அதைத்தொடர்ந்து கார்த்தியின் கைதி, விஜயின் மாஸ்டர், கமல்ஹாசனின் விக்ரம் என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்திருந்தார். கடைசியாக இவரது இயக்கத்தில் லியோ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கி வருகிறார் லோகேஷ். ரஜினியின் 171 வது படமான இந்த படத்திற்கு கூலி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்புகள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தொடங்கப்பட்டு மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் , கார்த்தியின் கைதி 2 திரைப்படத்தை இயக்கப் போகிறார் என்று சொல்லப்படுகிறது. பிரபல பாலிவுட் ஸ்டார் நடிகரை இயக்கும் லோகேஷ் கனகராஜ்!அதன்படி அடுத்த ஆண்டு இறுதிக்குள் இதன் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கிடையில் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக இவர் பிரபல பாலிவுட் ஸ்டார் நடிகரை இயக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த நடிகர் வேறு யாருமில்லை ஆமிர் கான் தான். இவர்களின் கூட்டணியில் உருவாக இருக்கும் இந்த படம் பான் இந்திய அளவில் உருவாகியிருக்கிறது. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்து அப்டேட்கள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ