தமிழக அரசின் 50-ஆவது தலைமைச் செயலாளராக முதல்வரின் செயலாளர்களில் ஒருவரான நா.முருகானந்தம் நியமனம்.
தமிழ்நாடு ஐஏஎஸ் பிரிவு அதிகாரியான இவர் சென்னையைச் சேர்ந்தவர். பொறியியல் மற்றும் எம்பிஏ பட்டதாரியான இவர் 1991-ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்தார்.
கடந்த 2001 முதல் 2004-ஆம் ஆண்டு வரை கோவை மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய முருகானந்தம், ஊரக வளர்ச்சித் துறையின் இணைச் செயலாளர், டெல்லி, தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உறைவிட ஆணையர், தொழில் துறை, நிதித் துறைகளின் செயலாளர் பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். தற்போது கூடுதல் தலைமைச் செயலாளர் பொறுப்பில் முதல்வரின் தனிபிரிவுச் செயலாளர் ஆக பணியில் உள்ள நிலையில், தமிழக அரசின் தலைமைச் செயலராக நியமனம் செய்யப்படள்ளார்.