Homeசெய்திகள்சினிமாகொட்டுக்காளி படத்தை தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படம்.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கொட்டுக்காளி படத்தை தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படம்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

-

- Advertisement -

நடிகர் சூரி நடிக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.கொட்டுக்காளி படத்தை தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படம்.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நடிகர் சூரி ஆரம்பத்தில் நகைச்சுவையின் நடிகராக நடித்து பெயர் பெற்றவர். அந்த வகையில் இவர் பரோட்டா சூரி என்று பலராலும் அறியப்பட்டவர். இவர் சிவகார்த்திகேயன், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். அதேசமயம் இவர் கடந்தாண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை எனும் திரைப்படத்தில் ஹீரோவாக களம் இறங்கி பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்றார். அதைத் தொடர்ந்து விடுதலை இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார் சூரி. இதற்கிடையில் இவரது நடிப்பில் கருடன் எனும் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அடுத்ததாக வருகின்ற ஆகஸ்டு 23ஆம் தேதி கொட்டுகாளி எனும் திரைப்படம் வெளியாக இருக்கிறது. கொட்டுக்காளி படத்தை தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படம்.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!இந்நிலையில்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பாக விமல் நடிப்பில் வெளியான விலங்கு என்ற வெப் தொடரை இயக்கிய பிரசாந்த் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் சூரி நடிக்கப் போகிறார் என்று செய்திகள் பரவி வந்தது. தற்போது இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் இயக்குனர் பிரசாந்த், சூரி ஆகியோரின் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்தை கருடன் படத்தை தயாரிக்க லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

MUST READ