Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்டுடே டின்னருக்கு இந்த முட்டை தொக்கு செஞ்சு பாருங்க.... ருசி அப்படி இருக்கும்!

டுடே டின்னருக்கு இந்த முட்டை தொக்கு செஞ்சு பாருங்க…. ருசி அப்படி இருக்கும்!

-

- Advertisement -

முட்டை தொக்கு செய்ய தேவையான பொருட்கள்:டுடே டின்னருக்கு இந்த முட்டை தொக்கு செஞ்சு பாருங்க.... ருசி அப்படி இருக்கும்!

முட்டை – 4
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 3
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கொத்தமல்லி – ஒரு கொத்து
இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
மல்லித்தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முட்டை தொக்கு செய்ய முதலில் முட்டையை நன்கு வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதே சமயம் வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி போல் வந்த பிறகு அதில் இஞ்சி – பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும். அடுத்தது தக்காளி, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

தக்காளி நன்கு மசிந்து வந்த பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் எதுவும் ஊற்றாமல் வதக்க வேண்டும். மசாலா வகைகள் அனைத்தும் வதங்கி எண்ணெய் பிரிந்து வந்த பிறகு அதில் வேக வைத்திருக்கும் முட்டையை சேர்த்து ஒருமுறை பிரட்டி விட வேண்டும்.

இப்போது அருமையான முட்டை தொக்கு தயார்.டுடே டின்னருக்கு இந்த முட்டை தொக்கு செஞ்சு பாருங்க.... ருசி அப்படி இருக்கும்!

இதில் கூடுதல் சுவைக்காக கரம் மசாலா சேர்த்துக் கொள்ளலாம். மேலும் வேக வைத்த முட்டையை துருவியும் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த முட்டை தொக்கினை சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை ஆகியவற்றிற்கு சைடிஷ
ஷாக வைத்து சாப்பிடலாம். நீங்களும் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க.

MUST READ