நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். அதே சமயம் இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து பெயர் பெற்றுள்ளார்.அந்த வகையில் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்து வரும் விஜய் சேதுபதி கடைசியாக மகாராஜா எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இதற்கிடையில் விஜய் சேதுபதி, ட்ரெயின், ஏஸ் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் தான் சமீப காலமாக எதற்கும் துணிந்தவன் பட இயக்குனர் பாண்டிராஜுடன், விஜய் சேதுபதி கூட்டணி அமைக்க போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அதைத்தொடர்ந்து இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிகை நித்யா மேனன் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் கசிந்திருந்தது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் நடிகர் விஜய் சேதுபதி இந்த புதிய படத்தில் பரோட்டா மாஸ்டராக நடிக்க இருக்கிறாராம். அதற்காக பயிற்சிகளும் மேற்கொண்டு வருகிறாராம் விஜய் சேதுபதி. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்க இருப்பதாக புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
- Advertisement -