- Advertisement -
சிட்லபாக்கத்தில் பூட்டிய அடுக்குமாடி வீட்டில் மின் கசிவு காரணமாக தீபற்றிய நிலையில் தாம்பரம் தீயணைப்பு துறையினர் உரிய நேரத்தில் அனைத்ததால் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
சென்னையை அடுத்த சிட்லப்பாக்கத்தில் ஆனந்தம் அடுக்கு மாடி குடியிருப்பில் 3 வது மாடியில் வசிப்பவர் அன்வர்பாஷா, குடும்பத்துடன் 15 ம் தேதி வீட்டை பூட்டி ஹைதராபாத் சென்ற நிலையில் பூட்டிய வீட்டில் இருந்து புகை வெளியேறியுள்ளது.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் கவுன்சிலர் ஜெகன் மூலமாக தாம்பரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்த நிலையில் விரைந்துவந்த தீயணைப்பு வீரர்கள் கதவை உடை உள்ளே நுழைந்து தீயை அணைத்தனர்.
மின் இணைப்பை துண்டிக்கால் சென்றதால் ஏசி இணைப்பில் தீபற்றி அங்குள்ள படுக்கையில் தீபற்றி புகை வெளியானது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.