- Advertisement -
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து, ரூ.53 ஆயிரத்து 680-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டு வருகிறது. நேற்று சவரனுக்கு 80 ரூபாய் வரை விலை குறைந்தது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து, சவரன் ரூ.53 ஆயிரத்து 680-க்கு விற்பனையாகிறது. இதேபோல், தங்கம் விலை கிராமுக்கு 50 ரூபாய் அதிகரித்து, கிராம் ரூ.6 ஆயிரத்து 710-க்கு வர்த்தகமாகிறது.
அதேவேளையில், வெள்ளி விலையில் இன்று மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி 92 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ 92 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.