Homeசெய்திகள்சென்னைசென்னையில் 19 காவல் உதவி ஆணையர்கள் மாற்றம்! டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி

சென்னையில் 19 காவல் உதவி ஆணையர்கள் மாற்றம்! டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி

-

- Advertisement -

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பிறகு சென்னை காவல் துறையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது சென்னையில் 19 காவல் உதவி ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் 19 காவல் உதவி ஆணையர்கள் மாற்றம்! டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி19 காவல் உதவி ஆணையர்கள் பணியிட மாற்றம்…

ஆம்ஸ்ட்ராங் கொலையை தொடர்ந்து கொலை நடைபெற்ற பகுதியான செம்பியம் காவல் உதவி ஆணையர் பிரவீன் குமார் சென்னை காவல்துறை பாதுகாப்பு பிரிவு உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் சென்னை காவல் துறை பயிற்சி பிரிவு உதவி ஆணையர் முனியசாமி அண்ணா நகர் உதவிய ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும்  இவர்கள் மட்டுமல்லாது மேலும் 17 காவல் உதவி ஆணையர்களை இடம் மாற்றம் செய்து தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு…

குறிப்பாக சென்னை காவல்துறை மத்திய குற்ற பிரிவில் பணியாற்றும் உதவி ஆணையர் அனைவரும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் சென்னை காவல் ஆணையராக மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த விஜயராமலு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை நிகழ்ந்த செம்பியம் காவல் உதவி ஆணையர் பிரவீன் குமார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல சென்னை காவல்துறை நுண்ணறிவு பிரிவு உதவியாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வடபழனி காவல் உதவியாளராக இருந்த அருள் சந்தோஷ் முத்துவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

எழும்பூர் காவல் உதவி ஆணையர் மனோஜ் குமார் நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையராக இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கடந்த ஜூலை 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் மாநில கட்சி தலைவர் பொதுவெளியில் வைத்து சரமாரியாக வெற்றி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தமிழகம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை உச்சத்தில் இருப்பதற்கு இது எடுத்துக்காட்டு என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையாக ஆளும் அரசை விமர்சித்து வந்தனர்.

இதனையடுத்து தமிழக காவல்துறையில் தொடர்ந்து பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி சென்னை காவல்துறை ஆணையர் மற்றும் பல்வேறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் என மொத்தமாக 24 ஐ பி எஸ் அதிகாரிகளை தமிழக அரசு அதிரடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது மேலும் சென்னையில் மத்திய குற்றப்பிரிவு பணியாற்றி வரும் உதவி ஆணையர்கள் அனைவரும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ