Homeசெய்திகள்சினிமாஓடிடியில் வெளியானது 'ஜமா' திரைப்படம்!

ஓடிடியில் வெளியானது ‘ஜமா’ திரைப்படம்!

-

- Advertisement -

ஜமா திரைப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.ஓடிடியில் வெளியானது 'ஜமா' திரைப்படம்!அறிமுக இயக்குனர் பி எஸ் வினோத் ராஜ் என்பவர் கூழாங்கல் எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை லர்ன் அண்ட் டீச் புரொடக்சன் நிறுவனம் தயாரித்திருந்தது. அடுத்ததாக இந்த தயாரிப்பு நிறுவனம் ஜமா எனும் திரைப்படத்தை தயாரித்திருந்தது.ஓடிடியில் வெளியானது 'ஜமா' திரைப்படம்! இந்த படத்தை பாரி இளவழகன் இயக்கி படத்தில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். அவருடன் இணைந்து ராட்சசன், அசுரன் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான அம்மு அபிராமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், கே வி என் மணிமேகலை உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். எம் ஏ பார்த்தா இதன் எடிட்டிங் பணிகளை கவனித்திருந்தார். கோபிகிருஷ்ணா இதற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். ஓடிடியில் வெளியானது 'ஜமா' திரைப்படம்!தெருக்கூத்து சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருந்த இந்த படம் கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி திரைக்கு வந்தது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

MUST READ