Homeசெய்திகள்சினிமா'வேட்டையன்' படத்தின் 'மனசிலாயோ' பாடல் ரிலீஸ் இந்த தேதியில் தான்!

‘வேட்டையன்’ படத்தின் ‘மனசிலாயோ’ பாடல் ரிலீஸ் இந்த தேதியில் தான்!

-

- Advertisement -

வேட்டையன் படத்தின் மனசிலாயோ பாடல் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.'வேட்டையன்' படத்தின் 'மனசிலாயோ' பாடல் ரிலீஸ் இந்த தேதியில் தான்!

ரஜினி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் வேட்டையன். ரஜினியின் 170வது படமான இந்த படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கி இருக்கிறார். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இதற்கு இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்க அவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். மேலும் அமிதாப் பச்சன், பகத் பாஸில், ராணா டகுபதி, துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'வேட்டையன்' படத்தின் 'மனசிலாயோ' பாடல் ரிலீஸ் இந்த தேதியில் தான்!இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது பின்னணி வேலைகளும் டப்பிங் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படம் வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ரசிகர்கள் பலரும் இந்த படத்தை திரையரங்குகளில் காண மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். அதேசமயம் இசையமைப்பாளர் அனிருத் வேட்டையன் படத்தின் மனசிலாயோ எனும் முதல் பாடல் விரைவில் வெளியாக இருப்பதாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டு இருந்தார்.'வேட்டையன்' படத்தின் 'மனசிலாயோ' பாடல் ரிலீஸ் இந்த தேதியில் தான்! ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்த விநாயகனின் டயலாக்கான மனசிலாயோ தான் வேட்டையன் படத்தில் முதல் பாடல் என்பது தெரிய வந்ததும் ரசிகர்கள் பலரும் பாடல் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில் இந்த பாடல் வருகின்ற ஆகஸ்ட் 26 ஆம் தேதி வெளியாகும் என்று புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. இந்தப் பாடலுக்காக கேரளா ஸ்டைலில் செட் அமைக்கப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ