Homeசெய்திகள்சினிமாஎன் வாழ்நாளில் இந்த கிளைமாக்ஸ் தான் கடினமானது.... 'புஷ்பா 2' படம் குறித்து அல்லு அர்ஜுன்!

என் வாழ்நாளில் இந்த கிளைமாக்ஸ் தான் கடினமானது…. ‘புஷ்பா 2’ படம் குறித்து அல்லு அர்ஜுன்!

-

- Advertisement -

நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா 2 படம் குறித்து பேசி உள்ளார்.என் வாழ்நாளில் இந்த கிளைமாக்ஸ் தான் கடினமானது.... 'புஷ்பா 2' படம் குறித்து அல்லு அர்ஜுன்!

அல்லு அர்ஜுன் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான புஷ்பா திரைப்படத்தில் நடித்திருந்தார். புஷ்பா தி ரைஸ் என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்த இந்த படத்தினை சுகுமார் இயக்கியிருந்தார். பான் இந்திய அளவில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்று அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது. இதைத்தொடர்ந்து தற்போது புஷ்பா தி ரூல் என்று சொல்லப்படும் புஷ்பா 2 திரைப்படம் உருவாகி வருகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பகத் பாசில் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் தயாராகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் படத்தின் அடுத்தடுத்த பாடல்களும் டீசரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. என் வாழ்நாளில் இந்த கிளைமாக்ஸ் தான் கடினமானது.... 'புஷ்பா 2' படம் குறித்து அல்லு அர்ஜுன்!அதேசமயம் இந்த படம் ஆரம்பத்தில் ஆகஸ்ட் 15-ல் திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் 2024 டிசம்பர் 6ஆம் தேதிக்கு இதன் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா 2 படம் குறித்து பேசி உள்ளார். அவர் பேசியதாவது, “என்னுடைய வாழ்நாளில் நான் நடித்ததில் மிகவும் கடினமான கிளைமாக்ஸ் என்றால் அது புஷ்பா 2 படத்தின் கிளைமாக்ஸ் தான். மிகவும் கடினமானது. மிகவும் களைப்பானது” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ