Homeசெய்திகள்சினிமாநீண்ட இடைவெளிக்கு பிறகு 'பிசாசு 2' படம் குறித்து பேசிய மிஸ்கின்!

நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘பிசாசு 2’ படம் குறித்து பேசிய மிஸ்கின்!

-

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக பலம் வரும் மிஸ்கின் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய் என பல வெற்றிப் படங்களை இயக்கியத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். தற்போது இவர் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு 'பிசாசு 2' படம் குறித்து பேசிய மிஸ்கின்!அதுமட்டுமில்லாமல் இசையமைப்பாளராகவும் முடிவெடுத்து பன்முகத் துறைகளில் பணியாற்றி வருகிறார். தற்போது இவரது இயக்கத்தில் ட்ரெயின் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து வருகிறார். அதே சமயம் மிஸ்கின் பிசாசு 2 எனும் திரைப்படத்தையும் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ஆண்ட்ரியா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு பெற்ற பிசாசு படத்தைப் போலவே இந்த படமும் ஹாரர் திரில்லர் கதை களத்தில் உருவாகி இருக்கிறது.நீண்ட இடைவெளிக்கு பிறகு 'பிசாசு 2' படம் குறித்து பேசிய மிஸ்கின்! இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2022 ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்ட நிலையில் ரிலீஸ் ஆகாமல் இன்னும் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் மிஸ்கின் பிசாசு 2 படம் குறித்து பேசி இருக்கிறார். அதன்படி சமீபத்தில் நடந்த பேசியல், “பிசாசு 2 திரைப்படம் கண்டிப்பாக வரும். படத்தின் தயாரிப்பாளர் சில பிரச்சனையில் மாட்டிக்கொண்டுள்ளார். இந்த சமயத்தில் அவரை தொந்தரவு செய்ய நான் விரும்பவில்லை. எப்போது ரிலீஸ் ஆனாலும் அந்த படம் வெற்றி படமாக அமையும்” என்று தெரிவித்துள்ளார் மிஸ்கின்.

MUST READ