கணவாய் மீன்கள் என்பது முதுகெலும்பில்லாத மின் வகைகளாகும். பேச்சுவழக்கில் இந்த மீன்களை கடம்பா என்று சொல்வர். இது பார்ப்பதற்கு ஆக்டோபஸ் போல இருக்கும். இந்த கணவாய் மீன்களில் நிறைய வகைகள் உண்டு. இதன் கண்கள் வித்தியாசமாக இருக்கும். இதன் பற்கள் ரொம்பம்போல் காணப்படும். தலையில் எட்டு கைகளையும் வாலில் இரண்டு துடுப்புகளையும் கொண்டிருக்கும். இந்த கணவாய் மீன் வகைகளில் வைட்டமின் பி12, பொட்டாசியம், பாஸ்பரஸ், ஒமேகா 3, காப்பர், செலினியம் போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த கணவாய் மீன்களை நான் எடுத்துக் கொள்வதால் உடல் எடை அதிகரிக்காது.
இது போன்று கணவாய் மீன்களில் ஏராளமான அற்புத பயன்கள் இருக்கிறது. குறிப்பாக இது இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க பெரிதும் பயன்படுகிறது. இதில் உள்ள நல்ல கொழுப்புகள் இதயத்தில் ஆரோக்கியத்திற்கு சிறந்தவையாகவும் தமனிகளில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கவும் உதவுகிறது. எனவே இதய நோயாளிகளுக்கு இந்த கணவாய் மீன்கள் நல்லது. அதே சமயம் சர்க்கரை நோயாளிகளுக்கும் இந்த மீன்கள் நல்ல தீர்வளிக்கும். அதாவது இன்சுலினை இது அதிகரிக்க செய்வதால் கணவாய் மீன்களை அருமருந்து என்று பலரும் சொல்கிறார்கள். மேலும் இதை ஆண்மை குறைபாட்டையும் சரி செய்ய உதவுகிறது. அத்துடன் இந்த மீன் வகைகள் நோய் எதிர்ப்பாற்றலையும் அதிகரிக்கச் செய்யும். ஆகையினால் நீங்கள் மீன் விரும்பிகளாக இருந்தால் நிச்சயம் இந்த கணவாய் மீன்களை வாங்கி சாப்பிட்டு பாருங்கள்.