இயக்குனர் மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத இயக்குனராக உருவெடுத்துள்ளார். இவர் பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளியான கர்ணன், மாமன்னன் போன்ற படங்கள் சமூகத்தில் சொல்லத் தயங்கும் விஷயங்களை துணிச்சலாக சொல்லி இருந்தது. அதன்படி மாரி செல்வராஜ் தன்னுடைய ஒவ்வொரு படங்களின் மூலம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகிறார். அடுத்ததாக இவரது இயக்கத்தில் பைசன் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இதற்கிடையில் இவருடைய நான்காவது படமாக உருவாகி இருப்பது வாழை. இந்த படம் மாரி செல்வராஜின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கும் நிலையில் சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைத்திருக்கிறார். தேனி ஈஸ்வர் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். இந்த படம் நாளை (ஆகஸ்ட் 23) திரைக்கு வர இருக்கிறது. அதற்கு முன்பாக திரைப் பிரபலங்கள் பலருக்கும் இந்த படத்தின் பிரத்யேக காட்சிகள் காட்டப்பட்டு வருகின்றன.
முத்தம் ❤️
—
நன்றி பாலா சார்#vaazhai
Tomorrow pic.twitter.com/ctqYbxBQ8w— Mari Selvaraj (@mari_selvaraj) August 22, 2024
அதன்படி இயக்குனர் மணிரத்னம், சிவகார்த்திகேயன், பா. ரஞ்சித், நெல்சன், ராம், லோகேஷ் கனகராஜ், மிஸ்கின் உள்ளிட்டோர் வாழை படத்தை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் பாலா வாழை திரைப்படத்தை பார்த்த பின்னர் கண் கலங்கி, மாரி செல்வராஜை கட்டி அணைத்து முத்தமிட்டார். இது தொடர்பான வீடியோவை இயக்குனர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு பாலாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.