Homeசெய்திகள்சினிமாஇன்று வெளியாகும் வாழை..... முத்தத்திலும் அரவணைப்பிலும் இளைப்பாறுகிறேன்..... மாரி செல்வராஜின் பதிவு வைரல்!

இன்று வெளியாகும் வாழை….. முத்தத்திலும் அரவணைப்பிலும் இளைப்பாறுகிறேன்….. மாரி செல்வராஜின் பதிவு வைரல்!

-

இயக்குனர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக காலடி எடுத்து வைத்தவர். அதைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் கர்ணன் திரைப்படத்தையும் உதயநிதி ஸ்டாலின்- வடிவேலு ஆகியோரின் நடிப்பில் மாமன்னன் திரைப்படத்தையும் இயக்கி மாபெரும் வெற்றி கண்டார் மாரி செல்வராஜ். இன்று வெளியாகும் வாழை..... முத்தத்திலும் அரவணைப்பிலும் இளைப்பாறுகிறேன்..... மாரி செல்வராஜின் பதிவு வைரல்!இவருடைய படங்களில் பெரும்பாலும் சமூகத்தில் சொல்ல தயங்கும் விஷயங்கள் துணிச்சலாக சொல்லப்பட்டிருக்கும். எனவே மாரி செல்வராஜ் காலத்தால் அழியாத படைப்புகளை படைத்து பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்று வருகிறார். அடுத்ததாக இவர் இயக்கியுள்ள திரைப்படம் தான் வாழை. மாரி செல்வராஜின் நான்காவது படமான இந்த படம் இன்று (ஆகஸ்ட் 23) வெளியாகியுள்ளது. இதில் கலையரசன், நகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இன்று வெளியாகும் வாழை..... முத்தத்திலும் அரவணைப்பிலும் இளைப்பாறுகிறேன்..... மாரி செல்வராஜின் பதிவு வைரல்!

இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்க தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். மாரி செல்வராஜின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. திரைப் திரைப்படங்கள் பலரும் இதன் பிரத்தியேக காட்சிகளை பார்த்து மாரி செல்வராஜை பாராட்டியுள்ளனர். இந்நிலையில் இந்த படம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “இன்று என்னுடைய நான்காவது படம் வாழை வெளியாகிறது. என் உச்சபட்ச கண்ணீரையும் கதறலையும் திரைக்கதையாக்கி சினிமாவாகி அதை உங்கள் முன்வைக்கிறேன். இனி உங்களின் மொத்தத்திலும் அரவணைப்பிலும் இளைப்பாறுவேன் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மாரி செல்வராஜின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ