Homeசெய்திகள்சினிமா'டிமான்ட்டி காலனி 2' படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் இணையத்தில் வெளியீடு!

‘டிமான்ட்டி காலனி 2’ படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் இணையத்தில் வெளியீடு!

-

டிமான்ட்டி காலனி 2 படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.'டிமான்ட்டி காலனி 2' படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் இணையத்தில் வெளியீடு!

அருள்நிதி நடிப்பில் உருவாகி இருந்த டிமான்ட்டி காலனி 2 திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு திரைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். இதில் அருள் நிதியுடன் இணைந்து பிரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஹாரர் திரில்லர் கதை களத்தில் வெளியான இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வந்தது. அதாவது கடந்த 2015 இல் வெளியான டிமான்ட்டி காலனி படத்தின் வெற்றிதான் இந்த எதிர்பார்ப்புக்கு காரணம். எனவே படத்தைக் காண ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இந்த படம் நல்ல விருந்தாக அமைந்திருந்தது.

அதன்படி ரசிகர்கள் மத்தியில் இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பேராதரவை பெற்று வெற்றிப்பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

மேலும் டிமான்ட்டி காலனி 2 படத்தை பி டி ஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரித்திருந்தது. சாம் சி எஸ் இதற்கு இசையமைத்திருந்தார். ஹரிஷ் கண்ணன் இதற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ