பிரபல நடிகரும் அரசியல்வாதியமான சீமான், சூரி நடிப்பில் வெளியான கொட்டுக்காளி திரைப்படத்தை பாராட்டியுள்ளார்.
நடிகர் கடந்த ஆண்டு வெளியான விடுதலை எனும் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து கருடன் படத்தில் ஆக்சன் ஹீரோவாக களம் இறங்கி வெற்றி கண்டார் சூரி. மேலும் விடுதலை 2 திரைப்படத்தையும் கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் தான் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி சூரி நடிப்பில் கொட்டுக்காளி எனும் திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தை கூழாங்கல் படத்தில் இயக்குனர் பி எஸ் வினோத் ராஜ் இயக்க படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தனது எஸ்.கே புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் கிடையாது. ஆணாதிக்கம் போன்ற சமூகத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கி இருக்கும் இந்த படம் திரையிடப்படுவதற்கு முன்பாகவே பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தற்போது ரிலீஸுக்கு பின்னரும் லோகேஷ் கனகராஜ், சுதா கொங்கரா போன்ற பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளைப் பெற்று வெற்றி பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது நடிகரும் நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான் கொட்டுக்காளி திரைப்படத்தை பாராட்டி இருக்கிறார். “உலக தரமான படைப்பாக கொட்டுக்காளி திரைப்படம் வெளியாகி உள்ளது மகிழ்ச்சியை தருகிறது. தமிழ் திரைத்துறையில் நல்ல கதை களத்திற்கான முக்கியத்துவம் குறைந்து விட்டதாக சொல்லப்பட்ட விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மகாராஜா, கருடன், தங்கலான், வாழை, கொட்டுக்காளி போன்ற அடுத்தடுத்து வெளியாகியிருக்கும் தமிழ் திரைப்படங்கள் அழுத்தமான கருப்பொருளோடு வெளியாகி இருப்பது மிகுந்த மன நிறைவை தருகிறது. குறைந்த பட்ஜெட்டில் மிக சிறிய கதை களத்தில் திரைக்கதைக்கு உயிரோட்ட மொழிக்கும் இசை என்று ஏதுமில்லாமல் சிறிதும் சோர்வோ சலிப்போ உண்டாகாமல் ஒரு திரைப்படத்தை சுவைபட படைத்தளிக்க முடியும் என்பதை மிகப் பெரிய சாதனை. பன்னாட்டு திரைப்படங்களுக்கு இணையான உயரத்தில் தமிழ் திரைக்கடையை சிறகடிக்க செய்த அன்புத்தம்பி வினோத் ராஜா அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள். கூழாங்கல் படத்தை போல் கொட்டுக்காளி படமும் விருதுகள் பல வெல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தம்பி சூரி தம்முடைய அபாரமான நடிப்பாற்றலால் நடிப்பின் உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கலைஞனாக சூரி திகழ்வார் என்பதற்கு கொட்டுக்காளி திரைப்படமும் மற்றுமொரு சான்று.
தமிழ்த்திரையுலகின் இளம் உச்சநட்சத்திரம் ஆருயிர் இளவல் சிவகார்த்திகேயன் அவர்களின் தயாரிப்பில், ஆருயிர் இளவல் சூரி அவர்களின் காத்திரமான நடிப்பில், அன்புத்தம்பி வினோத்ராஜ் அவர்களின் இயக்கத்தில் உலகத்தரமான படைப்பாக ‘கொட்டுக்காளி’ திரைப்படம் வெளியாகியுள்ளது மிகுந்த… pic.twitter.com/wxWCrktuMb
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) August 25, 2024
கதையின் நாயகியாக வரும் அன்னா பென் வெறித்துப் பார்க்கும் கண் பார்வை இல்லையே நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி திரைப்படத்திற்கு வலிமை சேர்த்திருக்கிறார். கதையின் மீது மட்டும் நம்பிக்கை வைத்து இப்படி ஒரு கலை படைப்பினை தயாரித்து வழங்கிய சிவகார்த்திகேயனுக்கும் என்னுடைய பாராட்டுகள். மேலும் கொட்டுக்காளி பட குழுவினருக்கு என்னுடைய அன்பும் வாழ்த்துகளும்” என்று தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு கொட்டுக்காளி திரைப்படத்தை பாராட்டி இருக்கிறார்.