முந்திரி கொத்து செய்ய தேவையான பொருட்கள்:
பச்சை நிற பாசிப்பயறு – ஒரு கப்
வெல்லம் – ஒரு கப்
அரிசி மாவு – 1/2 கப்
தேங்காய் துருவல் – 1/2 கப்
ஏலக்காய் பவுடர் – சிறிதளவு
மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் தேவையான – அளவு
செய்முறை
முந்திரி கொத்து செய்ய முதலில் வெள்ளத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து அதனை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்தது ஒரு கடாயில் பச்சை நிற பாசி பயறு சேர்த்து நன்கு வறுத்து தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போது பாசிப்பயறு ஆறிய பின் அதனை அரைத்து பொடியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் துருவிய தேங்காயை சேர்த்து பொன்னிறமாக வறுத்து அதில் அரைத்து வைத்திருக்கும் பாசிப்பயறு, ஏலக்காய் பவுடர் ஆகியவற்றை சேர்த்து கலக்க வேண்டும்.
அதைத் தொடர்ந்து வெல்ல பாகினை மீண்டும் சூடு படுத்தி அதில் பாசிப்பயறு கலவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்து விட வேண்டும்.
பின்னர் அதை அப்படியே இறக்கி வைத்து வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் போதே சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அதே சமயம் மற்றும் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உப்பு, மஞ்சள் தூள் ஆகிவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீரும் கலந்து இட்லி மாவு பதத்திற்கும் தோசை மாவு பதத்திற்கும் நடுவிலான பதத்தில் மாவினை கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி அதில் தயாரித்து வைத்திருக்கும் உருண்டைகளை மாவில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். இருபுறமும் பொன்னிறமாக வந்தபின் அதை சூடாக பரிமாறவும்.
டேஸ்டான இனிப்பு முந்திரி கொத்து தயார். நீங்களும் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க.