Homeசெய்திகள்தமிழ்நாடுராமேசுவம் மீனவர்கள் 8 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

ராமேசுவம் மீனவர்கள் 8 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

-

ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர்கள் 8 பேரை எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி  இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து 8 மீனவர்கள் ஒரு விசைப்படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இன்று அதிகாலை தனுஷ்கோடி தலைமன்னார் இடையே கச்சத்தீவுக்கு அருகே  மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை படற்படையினர் எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி அவர்களை கைது செய்தனர். மேலும் மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்தனர்.

fishermen arrested

தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்ட 8 மீனவர்களையும் மன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று விசாரணை  மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் மீனவர்கள் அனைவரும் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க திட்டமிட்டு உள்ளனர்.

MUST READ