அட்ஜஸ்ட்மென்ட் கேட்டா செருப்பால அடிங்க, நடிகர் விஷால் ஆவேச பேச்சு!
நடிகர் சங்கம் போலீஸ் ஸ்டேஷன் கிடையாது. ஆனாலும் எங்களிடம் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஷாலின் பிறந்த நாள் முன்னிட்டு முதியோர் இல்லத்திற்கு சென்று உணவு வழங்கினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, என் பிறந்த நாளை எப்போதும் இந்த இடத்தில் வந்து தான் தொடங்குவேன், இவர்களை சந்திப்பது மிகப்பெரிய பாக்கியம் அவர்களுடைய ஆசிர்வாதம் மிகப்பெரிய பாக்கியம்.
நான் உணவு வழங்கவில்லை என்றாலும் அவர்கள் என்னை வாழ்த்தியிருப்பார்கள் என்று நினைக்கிறேன் அவர்கள் மனசார வாழ்த்தினார்கள்.
நடிகைகளுக்கு பாதுகாப்பான சூழல் உள்ளது. அவரவர்கள் பொறுப்பில் உள்ளவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். நடிகைகள் தனிப்பட்ட முறையில் பாதுகாப்பாளர்கள் வைத்துள்ளார்கள்.
20% தான் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. மற்றவர்கள் வாய்ப்பு கிடைக்காமல் நிறைய அலுவலகங்களில் ஏமாற்றம் அடைகிறார்கள். எந்த கம்பெனிக்கு செல்கிறார்கள் அவர்கள் சொல்வது உண்மையா? திரைப்படம் எடுக்கிறவர்களா? தான் என்பது குறித்து சுதாரிப்பு கொள்ள வேண்டும்.
ஹேமா கமிஷன் போன்று தமிழ் திரைப்பட சங்கம் சார்பிலும், தமிழ் திரைப்பட உலகில் ஒரு குழு அமைக்க சங்கம் சார்பில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது விரைவில் அமைக்கப்படும்.
யாரோ ஒருவர் பைத்தியக்கார தனமாக ஒரு பெண்ணை பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்வார்கள். ஒரு விசியம் என்ன என்றால் அந்த பெண்ணுக்கு தைரியம் வேண்டும், அப்படி கேட்கிறவர்களை செருப்பால் அடிக்க வேண்டும்.
யாராக இருந்தாலும் பெண்களை இதுபோன்று பயன்படுத்த நினைப்பவர்களுக்கு தண்டனை கிடைத்தாக வேண்டும்.
தமிழ் சினிமாவிலும் காலம் காலமாக குற்றச்சாட்டு இருந்து கொண்டு தான் உள்ளது இங்கும் அது போல் பிரச்சினைகள் இருக்கலாம்.
உப்மா கம்பெனிகள் ஒரு ஆபிஸ் போட்டு போட்டோ ஷூட் எடுத்து பெண்களை பயன்படுத்தி கொள்கிறார்கள். அதை நான் மறுக்கவில்லை.
தமிழ் திரையுலகில் இப்படி இருப்பதை கண்டுபிடிக்க நாங்கள் போலீஸ் இல்லை. நடிகைகள் யாராவது தங்களிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் கொடுத்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்.
பின்னர் தயாரிப்பாளர் சங்கம் ஸ்ட்ரைக் குறித்த கேள்விக்கு, ஸ்ட்ரைக் செய்து என்ன செய்யப் போகிறீர்கள்? எதற்கு ஸ்ட்ரைக்? அதனால் என்ன பயன்? பணம் இருக்கிறவர்கள் படம் எடுப்பார்கள். எல்லா தயாரிப்பாளர்களும் விமானம் பிடித்து பாம்பேக்கு சென்று அமேசான், நெகட்பிலிப்ஸ் நிறுவனத்திடம் பேசி முடிவெடுங்கள் என்றார்.